பேடிஎம் மூலம் பணம் அனுப்பப்பட்டது ஆனால் பெறவேண்டியவருக்கு பணம் சென்று சேரவில்லையா? கவலை வேண்டாம்

பேடிஎம்மில், நாங்கள், தடையில்லாத டிஜிட்டல் பேமெண்ட்ஸ் சிஸ்டமை வழங்க எங்களால் இயன்ற முயற்சிகளை செய்கிறோம். பேடிஎம் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்/உறவினர்களுக்கு பின்வரும் வழிகளில் பணம் அனுப்பலாம்:

1. பேடிஎம் வேல்லட்டிலிருந்து பேடிஎம் வேல்லட்டிற்கு

2. பேடிஎம் வேல்லட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு

3. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிலிருந்து மற்ற வங்கி கணக்குகளுக்கு

4. UPI மூலம் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து மற்ற வங்கிக் கணக்குகள் / VPAவிற்கு

நாங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் உடனடியாக ப்ராசஸ் செய்கிறோம். 99.9% சமயங்களில் பணம் பெறுபவருக்கு தொகையானது உடனடியாக சென்றடையும்

ஒருவேளை பணம் சென்றடையவில்லை எனில், நீங்கள் சரியான நபருக்குத் தான் பணம் அனுப்பியுள்ளீர்கள் என்பதை முதலில் சரிபார்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம். இல்லையெனில், நீங்கள் செய்ய வேண்டியது இது தான்

நீங்கள் சரியான நபரின் விவரங்களை தான் கொடுத்துள்ளீர்கள் ஆனால் அவருக்கு பணம் சென்றடையவில்லை எனில் — அரிதாக உங்கள் பரிவர்த்தனை சிக்கிக் கொண்டிருக்கவும், ரீகன்சிலியேஷன் சைக்கிளுக்கு சென்றிருக்கவும் கூடும். மேலும் விவரங்களுக்கு பின்வரும் ப்ளாக்குகளைப் பார்க்கவும்:

1. பேடிஎம் வேலட்/பேடிஎம் பேமேண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பிற வங்கி கணக்குக்கு

2. யுபிஐ வழியாக இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்கு/விபிஏ