தவறான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டீங்களா? என்ன பண்றதுன்னு இங்கே பார்க்கலாம்

பேடிஎம்மில், நாங்கள், தடையில்லாத டிஜிட்டல் பேமெண்ட்ஸ் சிஸ்டமை வழங்க எங்களால் இயன்ற முயற்சிகளை செய்கிறோம். பேடிஎம் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்/உறவினர்களுக்கு பணம் அனுப்பும் போது பணம் பெறுபவரது சரியான விவரங்களை வழங்குவதும், அதை உறுதி செய்து கொள்வதும் உங்கள் பொறுப்பாகும்.

ஒருமுறை ஒருவருக்கு பணம் அனுப்பப்பட்டு விட்டால் அதை மீண்டும் கோரவோ, திருப்பவோ பேடிஎம்மால் இயலாது.

இது போன்ற சமயங்களில் யாராலும் பணத்தை மீண்டும் கோரவோ, திருப்பவோ இயலாது என்பதையும், அக்கவுண்டிற்கு உரியவர் மட்டுமே தனது வங்கியிடம் பணத்தை திருப்பக் கோரி விண்ணப்பிக்க இயலும் என்பதையும் பலதரப்பட்ட ஒழுங்குமுறை ஏஜன்சீக்களும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. பணம் அனுப்பும் முறை எதுவாக இருப்பினும், பணம் பெறுபவரது விவரங்களை நன்றாகப் படித்து உறுதி செய்து கொண்ட பிறகே பணப்பரிமாற்றத்தை தொடங்க வேண்டும் என்று உறுதியாக நாங்கள் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.

பேடிஎம் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்/உறவினர்களுக்கு பின்வரும் வழிகளில் பணம் அனுப்பலாம்:

  1. பேடிஎம் வேல்லட்டிலிருந்து பேடிஎம் வேல்லட்டிற்கு
  2. பேடிஎம் வேல்லட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு
  3. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கிலிருந்து மற்ற வங்கி கணக்குகளுக்கு
  4. UPI மூலம் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து மற்ற வங்கிக் கணக்குகள் / VPAவிற்கு

பணப்பரிமாற்றம் நிறைவடைந்ததும், தொகையானது உடனடியாக, பணம் பெறுபவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இது போன்ற சமயங்களில் யாராலும் அந்தப் பணத்தை மீண்டும் கோரவோ, திருப்பவோ இயலாது என்பதையும், அக்கவுண்டிற்கு உரியவர் மட்டுமே தனது வங்கியிடம் பணத்தை திருப்பக் கோரி விண்ணப்பிக்க இயலும் என்பதையும் பலதரப்பட்ட ஒழுங்குமுறை ஏஜன்சீக்களும் தெளிவாக எடுத்துரைக்கின்றன..

ஒருவேளை நீங்கள் தவறான நபருக்கு பணம் அனுப்பியிருந்தால், அந்த நபரை நீங்கள் தொடர்பு கொண்டு பணத்தை உங்களுக்கு திருப்பி அனுப்பும்படி கேட்பது பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லையெனில், அவரின் வங்கியைத் தொடர்பு கொண்டு, அவரை நேரடியாகத் தொடர்பு கொள்வதற்காக அவரது விவரங்களைக் கேட்கலாம். பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லையெனில், நீங்கள் 24×7 உதவி மூலம் பேடிஎம்மை தொடர்பு கொள்ள வேண்டும்

பணம் பெற்றவரிடம் பேடிஎம் வேல்லட் அல்லது பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட் இருக்கும் பட்சத்தில், பணத்தை உங்களுக்குத் திருப்பி அனுப்புதல் வேண்டி நாங்கள் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்போம்.

பணம் பெறுபவரிடம் பேடிஎம் அக்கவுண்ட் இல்லாத பட்சத்தில், நாங்கள் அவரின் வங்கியைத் தொடர்பு கொள்வோம். அவர்கள் அந்த நபருடன் தொடர்பு கொண்டு பேசுவர். அவர் அனுமதி வழங்கும் பட்சத்தில் தொகையானது உடனடியாக உங்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும். அப்படி அனுமதி வழங்கவில்லயெனில் சட்டரீதியாக அல்லது காவல்துறை உதவியை நாடுவது மட்டுமே மாற்று வழியாகும்.

நினைவிருக்கட்டும், பணத்தை திருப்பி பெறுவதற்கான அனுமதி கோரி நீங்கள், பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அனைத்து நிறுவனங்களும் உங்கள் இருவருக்குமிடையில் பாலமாக செயல்படுவர். மேலும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கால அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது (உதா: பணத்தை திரும்ப பெறுவதற்காக, பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ள வங்கி முழுமையாக 30 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

பணப்பரிமாற்றம் செய்யும் போது விவரங்களை சரியாகக் கொடுக்குறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள நாங்கள் வசதிகள் அமைத்துக் கொடுத்துள்ள போதும், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றம் செய்யும் போதும் அந்த வசதிகளைப் பயன்படுத்தி சரியான தகவல்களைக் கொடுப்பது உங்கள் பொறுப்பே ஆகும்